பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ராகுல், சோனியாவுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடக் கோரிய அமலாக்கத் துறையின் கோரிக்கையை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, ஆதாரங்களுக்கு கூடுதல் ஆவணங்களைக் கொண்டு வாருங்கள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபியுங்கள் என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதனால் ராகுல், சோனியா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி கோக்னே, இதுபோன்ற நோட்டீஸ் பிறப்பிக்கும் முன்பு, நீதிமன்றம் முழுமையாக நம்ப வேண்டும். முழுமையான திருப்தி அடையாமல், இதுபோன்ற ஒரு உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகளை அபகரித்ததாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தாா்.
இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.
மேலும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முடக்கியது.
இதை விசாரித்த தீா்ப்பாயம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகள் மற்றும் பங்குகளை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.