செய்திகள் :

மெட்டா நிறுவனத்தை எச்சரிக்கும் நேபாளம்! காரணம் என்ன?

post image

நேபாள அரசு மெட்டா தொழிநுட்ப நிறுவனத்துக்கு கால அவகாசம் கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல சமூக ஊடகங்க செயலிகளான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, நேபாள சட்டத்துக்கு உள்பட்டு 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு மெட்டா நிறுவனம் உடன்படவில்லை என்றால் அந்நாடு முழுவதும் அதன் செயலிகள் தடைசெய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தகவல் ஆணையம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய நேபாள தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரிதிவி சுப்பா குருங் கூறியதாவது:

‘மெட்டா நிறுவனம் நேபாள சட்டத்திற்கு உட்பட்டு அதன் நடவடிக்கைகளை பதிவு செய்ய அரசு பல முறை கேட்டுக்கொண்ட போதிலும் அதற்கு உடன்பட மறுத்து வருகின்றது.

மேலும், அவர்களுக்கு மூன்றாவது முறை அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடிந்த நிலையில் 7 நாள்களுக்குள் அந்நிறுவனம் பதிவு செய்யவில்லை என்றால் அதன் செயலிகள் அனைத்தும் நேபாளத்தில் தடை செய்யப்படும்’ என எச்சரித்துள்ளார்.

முன்னதாக, நேபாள அரசு தங்களது நாட்டில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிவிதிப்பு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தரவு நிர்வாக விதிகள் உள்ளிட்ட அந்நாட்டு சட்டங்களுக்கு உடன்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதியின் உயர் அதிகாரி நேபாளம் விரைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:தாய்லாந்து: கடலில் விழுந்து நொறுங்கிய காவல் விமானம்! 6 பேர் பலி!

தாய்லாந்து: கடலில் விழுந்து நொறுங்கிய காவல் விமானம்! 6 பேர் பலி!

தாய்லாந்து கடலில் காவல் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியாகினர்.தாய்லாந்தின் ஹுவா ஹின் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) காலை 8 மணியளவில் சிறிய ரக காவல் விமானத்தில் அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் ... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 50 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது: காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா்... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

‘விளாதிமீா் புதின், போதும் நிறுத்துங்கள்!’

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத... மேலும் பார்க்க

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதா் ஒப்பீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரூவன் அஸாா், பயங்கரவாத அமைப்புகளுக... மேலும் பார்க்க

குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்ட பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 போ் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அக்ஷய்ராஜ் மக்வானா கூறுகை... மேலும் பார்க்க