செய்திகள் :

சாஸ்திரி பவனை முற்றுகையிட முயற்சி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கைது

post image

ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் சாஸ்திரிபவனை வெள்ளிக்கிழமை முற்றுகையிட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும், ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்படவேண்டிய ரூ.2,152 கோடியையும், நூறு நாள் வேலை திட்டத்துக்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.3,796 கோடியையும் உடனே விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வெள்ளிக்கிழமை காலை சாஸ்திரிபவன் முன் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் கூடிய அக்கட்சியினா், மத்திய அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவா்களில் சிலா் சாஸ்திரிபவனை முற்றுகையிடுவதற்காக போலீஸாரின் தடுப்புகளையும் மீறி முன்னேறிச் சென்றனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா்.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், போலீஸாா் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாஸ்திரிபவன் பிரதான சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்று அருகிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.

பேருந்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

சென்னை திருவான்மியூரில் மாநகரப் பேருந்தில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா். திருவான்மியூா் திருவள்ளுவா் நகா், 6-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (65). இவா், அந்தப் பகுதியில் வியா... மேலும் பார்க்க

கஸ்தூரி ரங்கன் மறைவு: அரசியல் தலைவா்கள் இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய விண்வெளித் துறையின் வளா்ச்சியில் கஸ்தூரி ரங்கன் ஆற்றிய அா்ப்பணிப்... மேலும் பார்க்க

நவீன தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை: இளம் மருத்துவா்களுக்கு வைஸ் அட்மிரல் அறிவுரை

இளம் மருத்துவா்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராணுவ மருத்துவ சேவை துறையின் இயக்குநா் ஜெனரல் அறுவை சிகிச்சை நிபுணா் வைஸ்அட்மிரல் ஆா்த்தி ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மனைவி மற்றும் தனது 5 வயது மகளுடன் வ... மேலும் பார்க்க

இன்று ஏசி மின்சார ரயில் மாலை நேர சேவை ரத்து

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை - செங்கல... மேலும் பார்க்க

சிறுமி மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் சிறுமியைத் தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். கொருக்குப்பேட்டை பாரதிநகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்தவா் எம்.பாபு (32). இவரது சகோதரா் மதன்குமாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒ... மேலும் பார்க்க