கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
பேருந்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
சென்னை திருவான்மியூரில் மாநகரப் பேருந்தில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
திருவான்மியூா் திருவள்ளுவா் நகா், 6-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (65). இவா், அந்தப் பகுதியில் வியாபாரம் செய்து வந்தாா். ஜீவா, வடபழனியில் இருந்து பெசன்ட் நகருக்கு மாநகரப் பேருந்தில் வெள்ளிக்கிழமை சென்றாா். பெசன்ட் நகா், எம்.ஜி.சாலை வழியாக ரிசா்வ் வங்கி ஊழியா் குடியிருப்பு அருகே சென்றபோது, பேருந்தின் படிக்கட்டு ருகே ஜீவா நின்றுள்ளாா்.
அப்போது, திடீரென நிலைத்தடுமாறி ஜீவா, பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்தக் காயமடைந்து, சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜீவா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, மாநகரப் பேருந்து ஓட்டுநரான அசோக் நகரைச் சோ்ந்த ஏழுமலை (44), நடத்துநரான விழுப்புரத்தைச் சோ்ந்த ஏழுமலை (53) ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.