தூத்துக்குடி தும்பு கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தும்பு ஏற்றுமதி செய்யும் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசமானது.
தூத்துக்குடி வி.இ.சாலையில் தனியார் வணிக வளாகம் எதிரே தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ண சங்கர் என்பவருக்கு சொந்தமான தும்பு கிடங்கு உள்ளது. இங்கிருந்து தும்புகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!
இந்த நிலையில், இந்தக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அங்கிருந்த காவலாளி இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இதில் பல லட்சம் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து மத்திய பாகம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.