GRT: 'இது வளத்திற்கான வாக்குறுதி' - ஜிஆர்டி ஜுவல்லர்ஸுடன் அட்சய திருதியை கொண்டாடுங்கள்!
1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அதன் எளிய தொடக்கத்திலிருந்து இன்றளவும் நகைத் துறையின் அசைக்கமுடியாத மிக நம்பகமான பெயர்களில் முதன்மையாக ஒன்றாக வளர்ந்துள்ளது.
60 ஆண்டுகளை கடந்த பாரம்பரியத்துடன், இந்த நிறுவனம் தரம் மற்றும் கைவினைத்திறனுக்கான அதன் உறுதியான அர்ப்பணிப்புக்காக சிறப்பாக போற்றப்பட்டு வருகிறது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றின் விரிவான வகைகளை வழங்கும் ஜிஆர்டி, தென்னிந்தியாவில் 62 மற்றும் சிங்கப்பூரில் தனது ஒறு ஷோரூம் உட்பட 63 கிளைகளில் தனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வளர்ந்து வருகிறது.

இன்று, இந்த நிறுவனம் தனது சிறப்பிற்கான மதிப்புகளை தொடாந்து நிலைநிறுத்தி வருகிறது. அதே வேளையில் தனது சேவைகளையும் எல்லைகளையும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஜிஆர்டி ஜுவல்லாஸ் அட்சய திருதியை கொண்டாட்டம் என்ற சிறப்பான பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த பிரச்சாரம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் அட்சய திருதியை கொண்டாட்டம் எனவும், ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் அக்ஷய திரித்தியா வேடுகளு என்ற பெயரிலும், கர்நாடகாவில் 'அக்ஷய திரித்தியா ஸம்பரமா என்ற பெயர்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக, ஜிஆர்டி ஆறு சிறப்பு மற்றும் பிரத்தியேக சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகிறது தங்க நகைகள் வாங்கும்போது ஒரு கிராமுக்கு ரூ.250 குறைவு. பழைய தங்க நகை எக்ஸ்சேஞ்சில ஒரு கிராமுக்கு ரூ 75 கூடுதலாகவும், வைரத்தின் மதிப்பில் ஒரு காரட்டுக்கு ரூ. 12,500 குறைவாகவும் வழங்கப்படுகிறது.

கூடுதல் சலுகைகளில் அனகட் வைர மதிப்பில் 10% குறைவு, வெள்ளி பொருட்கள் மற்றும் கொலுசுகளுக்கு 20% செய்கூலியில் குறைவு மற்றும் வெள்ளி நகைகளுக்கு MRP மீது 10% குறைவாக வழங்குகிறது.!