செய்திகள் :

ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங்

post image

ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஐபிஎல் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 200 ரன்களுக்கும் அதிகமாக அணிகள் ரன்கள் குவிப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் மிகவும் எளிதாக 250 ரன்களுக்கும் அதிகமாக அதிக முறை ரன்கள் குவித்தனர். ஐபிஎல் தொடரில் எந்த அணி 300 ரன்களை முதலில் குவிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைக்கலாம், ஆனால்... தோல்விக்குப் பிறகு தோனி ஆதங்கம்!

300 ரன்கள் சாத்தியம்

ஒரு இன்னிங்ஸில் அணிகள் 300 ரன்கள் குவிக்கும் நிலையை ஐபிஎல் தொடர் எட்டிவிட்டதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: எங்களால் 300 ரன்கள் குவிக்க முடியும். 300 ரன்கள் அடிப்பது சாத்தியம் எனும் நிலையை ஐபிஎல் தொடர் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் வலுவாக உள்ளன. எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும் என்றார்.

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 250 ரன்களுக்கும் அதிகமாக மூன்று முறை ரன்கள் குவித்தது. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அதன் முதல் போட்டியிலேயே 286 ரன்கள் குவித்தது.

இதையும் படிக்க: ஏலத்தில் தவறு செய்துவிட்டோம்..! ஒப்புக்கொண்ட சிஎஸ்கே பயிற்சியாளர்!

அணிகள் அதிக ரன்கள் குவிப்பதற்கு இம்பாக்ட் பிளேயர் விதியும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி? டேனியல் வெட்டோரி பதில்!

சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் ... மேலும் பார்க்க

கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த நிக்கோலஸ் பூரன்!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் பகிர்ந்துள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுடன் நீண்ட காலம் பயணிக்கவுள்ள இளம் வீரர்; யாரைக் கூறுகிறார் அனில் கும்ப்ளே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த அணியுடன் நீண்ட காலம் பயணிக்கும் திறன் கொண்ட இளம் வீரரை கண்டுபிடித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் செ... மேலும் பார்க்க

ஜியோ ஹாட்ஸ்டார் 5 வாரங்களில் 10 கோடி சந்தாரார்கள்..! ரூ.10,000 கோடி வருமானம்!

ரிலையன்ஸ் நிறுவனமும் வால்ட் டிஸ்னி ஹாட்ஸ்டாரும் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் கடந்த பிப்.14, 2025 முதல் இயங்கி வருகின்றன. ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது. இதுவரை வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

ஏலத்தில் தவறு செய்துவிட்டோம்..! ஒப்புக்கொண்ட சிஎஸ்கே பயிற்சியாளர்!

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு அதன் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் அளித்த பேட்டியில் ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார். சேப்பாக்கில் நேற்றிரவு சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டி... மேலும் பார்க்க