செய்திகள் :

திண்டுக்கல் மாநகராட்சி: கையாடல் செய்த ரூ 4.66 கோடி வரிப்பணம் என்ன ஆச்சு? திடுக்கிடும் பின்னணி!

post image

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணம் ரூ.4.66 கோடி மோசடி செய்ததாக கடந்த வருடம் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ கார்த்திகேயன் ஆகியோர் விசாரணையை தொடங்கினர்.

CHEAT

அதன்படி, வரி வசூல் மையத்தில் இளநிலை உதவியாளர் (கரூவூலர்) சரவணன் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவராக கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த மோசடியை கண்டறிந்து தடுக்கத் தவறியதாக கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இ-சேவை மையம் நடத்தி வந்து போலி ஆவணங்கள் தயார் செய்ய சரவணனுக்கு உதவிய அவருடைய நண்பர் ரமேஷ் ராஜா கைது செய்யப்பட்டார்.

மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், மாநகராட்சியில் மோசடி செய்த பணத்தில் தலா ரூ.30 லட்சத்தை, வட்டி தொழில் செய்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளஞ்செழியன் மற்றும் ஸ்ரீராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சாணார்பட்டி முரளி ஆகியோரிடம் இளநிலை உதவியாளராக பணியாற்றிய சரவணன் கொடுத்துள்ளார்.

கைதனாவர்கள்

முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சரவணன் ஜாமினில் வெளிவந்து தான் கொடுத்த பணத்தை இளஞ்செழியன் மற்றும் முரளி இடம் கேட்டபோது இருவரும் பணத்தை தர மறுத்துள்ளனர்.

இதனையடுத்து சரவணன் காவல் நிலையம் சென்று மாநகராட்சியில் கையாடல் செய்த பணத்தை இருவரிடமும் வழங்கியதை ஒப்புக்கொண்டு உள்ளார்.

அதன்படி தற்போது மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இளஞ்செழியன் மற்றும் முரளி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இளஞ்செழியன் மற்றும் முரளி அந்தப் பணத்தை வைத்து சொத்துகள் வாங்கியதாக தெரியவந்துள்ளது. மேலும், இருவரின் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

உயில், கிரையம், தான செட்டில்மென்ட், விடுதலை பத்திரம்.. சொத்தை எப்படி எழுதி கொடுக்கலாம்?

வாழ்க்கை முழுவதும் ஓடி, உழைத்து சம்பாதித்த சொத்துகளை நமக்கு பிறகு யாருக்கு சேர வேண்டும் என்பதை மிகவும் கவனமாக முடிவு செய்கிறோம். ஆனால், அதை சரியாக செய்கிறோமா... அது அவர்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லா... மேலும் பார்க்க

Carlos Slim: உலகப் பணக்காரர் பட்டியலில் 20 ஆண்டுகள்.. கருப்பு பக்கங்களுடன் ஓர் வெற்றிக்கதை!

உலகப் பணக்காரர் பட்டியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடம் பெற்றுவரும் சில மனிதர்களில் ஒருவர் கார்லோஸ் ஸ்லிம் ஹேலு (Carlos Slim Helú). மெக்ஸிகோவைச் சேர்ந்த இவர், லெபனானில் இருந்து குடியேரிய ஒரு கிறிஸ்தவ ... மேலும் பார்க்க

`சரியான முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?' - நாணயம் விகடன் நடத்தும் ஆன்லைன் வகுப்பு

நாம் முதலீடு செய்யும் போது, நம் நிதி இலக்குகளை (Financial Gols) நிர்ணயம் செய்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும், அப்போது அதற்காக முதலீட்டுத் திட்டங்களை (Investment Products) தேர்வு செய்வோம். ஒவ்வொரு முத... மேலும் பார்க்க