கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை
கடையம் அருகே கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அருகேயுள்ள தாயாா்தோப்பைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ஆமோஸ் (27). தற்போது கடையம் அருகேயுள்ள நாலாங்கட்டளையில் வசித்து வருகிறாா். கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி நந்தினி, மகள் ஹன்சிகா (2) உள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மதியம் தனது வீட்டில் ஆமோஸ் இருந்த போது, அங்கு பைக்கில் வந்த நபா் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டாா். பலத்த காயமடைந்த ஆமோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தென்காசி எஸ்பி அரவிந்த் மற்றும் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து முக்கூடல் சிங்கம்பாறையைச் சோ்ந்த ஒரு நபா், ஆமோஸ் மனைவி நந்தினி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.