செய்திகள் :

ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா..! இதுதான் எல் கிளாசிக்கோ!

post image

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டை கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது.

எஸ்டாடியோ லா கார்ட்டுஜா ஒலிம்பிகோ டி செவில்லா திடலில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் முதல் 28ஆவது நிமிஷத்தில் பெட்ரி அசத்தல் கோல் அடித்தார்.

முதல் பாதியில் 1 கோல் உடன் பார்சிலோனா முன்னிலை பெற இரண்டாம் பாதியில் கிளியன் எம்பாப்பே ரோட்ரிகோவுக்கு பதிலாக களமிறங்கினார்.

ஆட்டத்தின் 70ஆவது நிமிஷத்தில் தனக்கு கிடைத்த ஃப்ரி கிக்கில் எம்பாப்பே கோல் அடித்து அசத்தினார்.

எம்பாப்பே மேஜிக்

1-1 என சமநிலைபெறவே ஆட்டம் சூடு பிடித்தது. ரியல் மாட்ரிட் தீயாக விளையாடினார்கள். அடுத்த 7ஆவது நிமிஷத்தில் அதாவது 77ஆவது நிமிஷத்தில் கார்னர் வாய்ப்பில் ஆரேலியன் டிஜானி சௌமனி கோல் அடித்தார்.

ரியல் மாட்ரிட் அணி 2-1 என முன்னிலை பெற்றது. ரியல் மாட்ரிட் வீரர்கள் ஆக்ரோஷமாகக் கொண்டாடினார்கள். இந்த மகிழ்ச்சி 7 நிமிஷத்தில் ரியல் மாட்ரிட்டை விட்டுச் சென்றது.

84ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா வீரர் பெர்ரன் டோரஸ் தனது அற்புதமான ஓட்டத்தினால் டிஃபென்டரை தாண்டிச் சென்று புத்திசாலினமாக கோல் அடித்தார்.

கடைசி நிமிஷத்தில் வென்ற பார்சிலோனா

ஆட்டம் 2-2 எனச் செல்லவே கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் கோல் அடிக்காததால் மீண்டும் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் 116ஆவது நிமிஷத்தில் ஜூல்ஸ் கவுண்டே அற்புதமான கோல் அடித்தார். இதன் மூலம் 3-2 என பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர்கள் 123, 124ஆவது நிமிஷங்களில் 3 வீரர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

நடுவரை அடிக்கப் பாய்ந்த ரியல் மாட்ரிட் வீரர்

ரியல் மாட்ரிட் வீரர் ரூடிகர் நடுவரின் மீது பாட்டிகளை தூக்கி வீசுவார். அடிக்கவும் பாயவே அவரை ரியல் மாட்ரிட் வீரர்கள் இழுத்துப் பிடித்தனர்.

இந்தப் போட்டியில் பார்சிலோனா அணிக்கு 2 பெனால்டி வாய்ப்பினை நடுவர் தவறவிட்டார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தப் போட்டியில் 60 சதவிகித பந்தினை பார்சிலோனா அணியினரே தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனா 32-ஆவது முறையாக ஸ்பானிஷ் கோப்பையை வென்றது.

நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் அன்டோனியோ ரூடிகர் தான்செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் சிறந்த டிஃபெண்டராக அறியப்படுகிறார். தனது ஆக்... மேலும் பார்க்க

ரெட்ரோ முன்பதிவு துவக்கம்!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயக... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

நடிகர்கள் முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் மறுவெளியீடாகிறது. இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். ... மேலும் பார்க்க

மறுவெளியீட்டில் சச்சின் 10 மடங்கு லாபம்! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

சச்சின் திரைப்படம் மறுவெளியீட்டில் லாபம் ஈட்டியுள்ளது குறித்து அதன் தயாரிப்பாளர் எஸ்.தாணு நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் கடந்த ஏப்.18ஆம் தேதி மறுவெளியீடானது.நடிகர... மேலும் பார்க்க

ஹவுஸ்ஃபுல்லாகும் துடரும் !

நடிகர் மோகன்லாலின் துடரும் திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான்திரைப்படம் ரூ. 250 கோடிக்கும... மேலும் பார்க்க

சிம்பு - 49 படப்பிடிப்பு அப்டேட்!

நடிகர் சிம்புவின் 49-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக ... மேலும் பார்க்க