சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!
விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்
விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
”தவெகவுடன் சேரும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால் அந்த கதவையும் மூடினேன். நீங்கள் நினைக்கும் சராசரி அரசியல்வாதி அல்ல இந்த திருமாவளவன்.
பாஜகவுடன் சேரமாட்டோம், பாமகவுடன் சேரமாட்டோம், இந்த கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறாது. அதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை.
துணை முதல்வர் பதவி என ஆசை வார்த்தைக் கூறி தன்னை வீழ்த்த முடியாது. அதிமுகவைப் போன்று, விஜய் திறந்துவைத்திருந்த கதவையும் கூட்டணி தர்மத்துக்காக மூடிவிட்டேன்” என்று பேசினார்.