`மகனுக்கு, BJP தந்த பிரஷர்! கூட்டணிக்கு EPS ஓகே' - Ramasubramanian Interview | A...
இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா
இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகளில் சூர்யா ஈடுபட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார். அதனை வெங்கி அட்லுரி இயக்க, நாக வம்சி தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!
மேலும் எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பை தான் கொண்டு வரும். இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என விரும்புகிறேன்.
பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக என் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
‘ரெட்ரோ’ படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.