செய்திகள் :

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

post image

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி - போரூர் இடையே வரும் ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் போரூர் வரை நாளை(ஏப். 28) அடுத்தகட்ட சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: விசாரணையைத் தொடங்கிய என்ஐஏ!

அமைச்சரவையில் மாற்றம்; செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு!

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.செந்தில்பாலாஜி நிர்வகித்து வந்த மின்சார... மேலும் பார்க்க

பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா: மதுரை ஆதீனம்

பஹல்காம் தாக்குதலுக்கு மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பேசியதாவது, பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நட... மேலும் பார்க்க

சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!

சிறுவாணி நீர்போல தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சுத்தமானதாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார். அண்ணா சொன்ன வார்த்தைகளை பூத் கமிட்டி உறுப்பினர்கள் மனதில் வைத்து மக்களைச் சென்று சந்திக... மேலும் பார்க்க

சமரசத்துக்கு இடமில்லை; தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது: விஜய்

மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்றும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப். 27) தெரிவித்தார்.கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வா... மேலும் பார்க்க

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உய... மேலும் பார்க்க

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வர... மேலும் பார்க்க