சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!
கஞ்சா வைத்திருந்ததாக இயக்குநர் கலித் ரஹ்மான் கைது!
கஞ்சா வைத்திருந்ததாக இயக்குநர்கள் கலித் ரஹ்மான் மற்றும் அஸ்ரஃப் ஹம்சா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அனுராக கரிக்கின் வெள்ளம் (Anuraga Karikkin Vellam) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கலித் ரஹ்மான். தொடர்ந்து, உண்டா (unda), லவ் (love), தள்ளுமலா (thallumala) என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து மலையாளத் திரைத்துறையின் முக்கியமான இளம் இயக்குநராக உள்ளார்.
அண்மையில், இவர் தயாரித்து இயக்கிய ஆழப்புழா ஜிம்கானா திரைப்படமும் வெற்றிப்படமானது.
இந்த நிலையில், கொச்சியில் அறை ஒன்றில் இயக்குநர்கள் கலித் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சா (தமாஷா), ஒளிப்பதிவாளர் தமீர் தாகீர் ஆகியோர் 1.6 கிராம் அளவுள்ள உயர்தர கஞ்சா வைத்திருந்தது காவல்துறை சோதனையில் தெரிய வந்ததுள்ளது.
உடனடியாக, மூவரும் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.