மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
சங்கரன்கோவிலில் வீசிய சூறைக் காற்றில் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் சேதம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை வீசிய சூறைக் காற்று மற்றும் கனமழையால் ஏராளமான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமடந்தன. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. இந்தக் காற்றில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. அரைமணி நேரம் வீசிய காற்றால் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் சங்கரன்கோவில் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது.
இது தவிர பல இடங்களில் மின் பாதைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து சங்கரன்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பூபேஷ்கான், தங்கராஜ், உதவி பொறியாளா்கள் கணேஷ் ராமகிருஷ்ணன், கருப்பசாமி மற்றும் மின்வாரிய பணியாளா்கள் மின்தடை ஏற்பட்ட இடங்களுக்கு மாற்று வழியில் மின்விநியோகம் செய்தனா். சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.