மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை
தென்காசி மாவட்டம் புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கால்நாட்டு குருநாதா் சக்தியம்மா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினா். 9 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து
முளைப்பாரி கும்மி பாட்டு நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.