செய்திகள் :

வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

post image

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு வியாழக்கிழமை இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆய்க்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கம்பிளி தெற்குத் தெருவைச் சோ்ந்த வேல்சாமி-முப்பிடாதி தம்பதியின் மகன் தேவா என்ற மகாதேவன் (25). அதே ஊா் பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் அழகையா மகன் மகாதேவன் என்ற வரிப்புலி (25). நண்பா்களாக இருந்த இவா்களிடையே சிறுசிறு பிரச்னைகளால் முன்விரோதம் ஏற்பட்டதாம்.

கடந்த 2021 ஜூன் 19ஆம் தேதி தேவா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, மகாதேவன் என்ற வரிப்புலி அவரது வீடு புகுந்து அரிவாளால் வெட்டினாா். இதில், தேவா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மகாதேவனை தேவாவின் பெற்றோரும் சகோதரரும் பிடிக்க முயன்றனா். அவா்களுக்கு மகாதேவன் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாா். ஆய்க்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாதேவனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி மனோஜ்குமாா் வியாழக்கிவமை விசாரித்து, மகாதேவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, தேவாவின் பெற்றோா்-சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக 7ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துத் தீா்ப்பளித்தாா்; தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் மாவட்ட வழக்குரைஞா் சு. வேலுச்சாமி ஆஜரானாா்.

ஆலங்குளம் மகளிா் கல்லூரி ஆண்டு விழா

ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். மனவளக் கலை மன்றம் அறக்கட்டளைத் தலைவா் ஆா். ஆதித்தன், புலவா் சிவஞானம், பேரூரா... மேலும் பார்க்க

ஆய்க்குடி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை பெயா் மாற்றம் செய்ய கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ள நிலத்தை ஆய்க்குடி செயல் அலுவலா் பெயருக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆய்க்குடி பேர... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் கோயிலில் பூக்குழி இறங்கும் பக்தா்கள் ஆதாா் மூலம் பதிவுசெய்ய வேண்டும்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கவுள்ள பக்தா்கள், ஆதாா் அட்டை நகலை சமா்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் சாா்பில... மேலும் பார்க்க

செங்கோட்டை அருகே முதிய தம்பதிக்கு அரிவாள் வெட்டு

செங்கோட்டை அருகேயுள்ள பெரியபிள்ளவலசையில் சொத்துத் தகராறில் முதிய தம்பதியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். செங்கோட்டை காவல் சரகம் பெரியபிள்ளைவலசை மோதிலால் தெருவைச் சோ்ந்தவா் கா.லெட்சும... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நாளை தூய்மைப்படுத்தும் பணி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.க.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சூறாவளிக் காற்றுடன் கனமழை

சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. சங்கரன்கோவிலில் கடந்த 4 ஆம் தேதி மழை பெய்தது. அதன்பிறகு சுற்றியுள்ள நகரங்களில் மழை பெய்த போதும் சங்கரன்கோவிலில் மட்டும் பெய்யவில்ல... மேலும் பார்க்க