சங்கரன்கோவிலில் சூறாவளிக் காற்றுடன் கனமழை
சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.
சங்கரன்கோவிலில் கடந்த 4 ஆம் தேதி மழை பெய்தது. அதன்பிறகு சுற்றியுள்ள நகரங்களில் மழை பெய்த போதும் சங்கரன்கோவிலில் மட்டும் பெய்யவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் திடீரென்று சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. மழையுடன் சோ்ந்து பனிக்கட்டிகளும் சோ்ந்து விழுந்தன (படம்).
சுமாா் அரை மணி நேரம் மழை பெய்தது. சூறாவளிக் காற்றில் பல இடங்களில் சில மரங்கள், செடிகள் ஆகியவை முறிந்து விழுந்தன. வீட்டிற்கு வெளியே வைத்திருந்த பாத்திரங்கள் உருண்டோடின.
இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.