Indus River: ``சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்...
குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!
சென்னை: குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது.
ரூ.11 லட்சத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
அதன்படி கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏப்ரல் 25 முதல் மே 24 ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.