இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருள...
திருப்பத்தூா்: ஏப். 25-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடைபெற உள்ளது.
இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், பல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
மிஸ்பண்ணிடாதீங்க... அங்கன்வாடி மையங்களில் 7,783 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம்.