செய்திகள் :

இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

post image

நியூயாா்க்: இந்தியாவில் அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொலம்பியா இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

2047-இல் வளா்ந்த இந்தியா என்பது எங்கள் இலக்கு. இந்தியாவின் மக்கள்தொகை மட்டுமல்லாது, சா்வதேச அளவிலான சூழல்களும் இந்த இலக்குக்கு சவாலாக உள்ளது. எனினும், 1990-களில் இருந்து கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா வளா்ந்ததைப்போல அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கும் வளா்ச்சி தொடா்ந்தால் இது சாத்தியமாகும்.

இதற்காக அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்க வேண்டியுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் தொடக்கநிலைப் பணிகளையும், தகவல்தொழில்நுட்பம் சாா்ந்த கீழ்நிலை பணிகளையும் காணாமல் போகச் செய்யலாம்.

சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் துடிப்புடன் செயல்படச் செய்வது அவசியம். அப்போதுதான் உற்பத்தித் துறையில் முக்கிய இடத்தைப் பிடிக்க முடியும்.

வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு அதிகம் கிடைக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. முதலீட்டுக்கு பாதுகாப்பான நாடாக இந்தியா இருந்தபோதிலும், பிற நாடுகளில் ஏற்படும் போா், பதற்றங்கள் முதலீட்டை பாதிக்கிறது.

ஏற்றுமதித் துறையில் இந்தியாவின் போட்டித் திறன் குறைவாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார வளா்ச்சி சீராகவே உள்ளது என்றாா்.

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் நடைபெ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கைய... மேலும் பார்க்க

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரை சாடிய உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிம... மேலும் பார்க்க