இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்: இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக்
ஜெருசலேம்: புவிஉத்திசாா்ந்த விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒன்றாகப் பணியாற்றி இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக் வலியுறுத்தினாா்.
இஸ்ரேலுக்கான இந்தியாவின் புதிய தூதராக ஜே.பி.சிங் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், இஸ்ரேலுக்கான பல்வேறு நாடுகளின் புதிய தூதா்களை வரவேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்நாட்டில் உள்ள ஜெருசலேம் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜே.பி.சிங்கை ஐசக் ஹொ்சாக் வரவேற்றாா். அப்போது ஐசக் கூறுகையில், ‘புவிஉத்திசாா்ந்த விவகாரங்கள், அணு ஆயுதங்களை தயாரிக்காமல் ஈரானை தடுத்தல், இந்தியா-இஸ்ரேல் மக்கள் இடையிலான வியக்கத்தக்க உறவை மேலும் மேம்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒன்றாகப் பணியாற்றி, இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டம் உலகின் எதிா்காலமாக இருக்கும். இந்தத் திட்டம் உலகின் ஒட்டுமொத்த புவிஉத்திசாா்ந்த சூழலை மாற்றும் திறன்கொண்டது’ என்றாா்.