செய்திகள் :

முதல்வருக்கு பாராட்டு விழா: கோவி. செழியன் அறிவிப்பு!

post image

தமிழக உயர்கல்வித் துறை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருகிற மே 3 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் கோவி. செழியன் பேரவையில் அறிவித்துள்ளார்.

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீட்டெடுத்து மாநில சுயாட்சியை உறுதிப்படுத்திய முதல்வருக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடைபெறும் என்று கூறியுள்ளார்.

"உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத்தந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை பெற்றுத்தந்துள்ள முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என பல்கலைக்கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், கல்லூரியின் கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதற்கு முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில் 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்று சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவும் இதில் அடங்கும். அதன்படி பல்கலைக்கழக வேந்தராக இனி முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 'பயங்கரவாதம் வேண்டாம்; அமைதி வேண்டும்!' - ஜம்மு-காஷ்மீர் மாணவிகள் பேரணி!

செந்தில் பாலாஜி வழக்கு: இருவரைக் காவலில் வைக்க உத்தவு

செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் செலுத்தாத இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்... மேலும் பார்க்க

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மாற்றம்!

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக இருந்த டாக்டர் கே சாந்தாராம், சென்னை மருத்துவக் ... மேலும் பார்க்க

சொந்த மாநில அரசு மீதே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறலாமா? வழக்குரைஞர் வில்சன்

தமிழக ஆளுநர், சொந்த மாநில அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்க முடியும்? என்று தமிழக அரசு வழக்குரைஞர் வில்சன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையி... மேலும் பார்க்க

ஆளுநர்களை வைத்து அரசியல்! அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு

ஆளுநர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது ... மேலும் பார்க்க

அவசர காலத்தை நினைவுபடுத்துகிறது: ஆளுநர் ரவி

மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "முதல்வர் ஸ்டாலி... மேலும் பார்க்க

ரூ.200-க்கு வீடுகளுக்கு நேரடி டேட்டா சேவை?

தமிழக மக்களின் வீடுகளுக்கு குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.சட்டப்பேரவையில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற... மேலும் பார்க்க