செய்திகள் :

சாவர்க்கர் குறித்த கருத்து : `இது எதாவது ராகுல் காந்திக்கு தெரியுமா?’ - காட்டமான உச்ச நீதிமன்றம்

post image

கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்ட ஒற்றுமையை யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, `சாவர்க்கர் பிரிட்டிஷார் உடன் இணைந்து செயல்பட்டார்’ என்றும் `பிரிட்டிஷார் இடமிருந்து அவர் பென்ஷன் பெற்றார்’ என்றும் கூறியிருந்தார்.

இதற்கு எதிராக நிற்பேந்திர பாண்டே என்பவர் லக்னோவில் புகார் அளித்திருந்தார். லக்னோ மேஜிஸ்திரேட் நீதிமன்றம், `ராகுல் காந்தி நேரில் ஆஜராக கடந்த 2024 டிசம்பர் 12-ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

`அது ராகுல் காந்திக்கு தெரியுமா?’

இந்த மேல்முறையீட்டு மனுமைதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபன்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது

ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம், ``மகாத்மா காந்தி வைஸ்ராயிடம் பேசும் பொழுதும் கடிதம் எழுதும் போதும் `உங்கள் கீழ்படிந்த ஊழியர்’ என்ற பொருள் கொண்ட ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவார். அது ராகுல் காந்திக்கு தெரியுமா? இவரது பாட்டியான இந்திரா காந்தி சாவர்க்கரை புகழ்ந்து கடிதம் எழுதி இருக்கிறார். அதுவாவது தெரியுமா? நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும் நாட்டின் வரலாறு பற்றியும் எதுவும் தெரியாமல் இப்படி பொறுப்பற்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது” என நீதிபதிகள் கண்டிப்பாக தெரிவித்தனர்.

`நேரடியாக வேலைக்காரன் என்ற பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது’

``நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை எப்படி நடத்தக் கூடாது என்பதாகத்தான் இது இருக்கிறது. உங்களுக்கு இந்தியாவின் வரலாறு எதுவும் தெரியவில்லை என்பதுதான் இது காட்டுகிறது. ஒரு அரசியல் கட்சியின் முக்கிய தலைவராக இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது ஏன் இப்படியான பொறுப்பற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்துகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சாவர்க்கர் வழிபடப்படுகிறார்.

பல நீதிபதிகள் கூட தலைமை நீதிபதிகளுக்கு உங்கள் ஊழியர் என்ற வார்த்தையை பயன்படுத்தி தான் கடிதமே எழுதுகிறார். அதற்கு நேரடியாக வேலைக்காரன் என்ற பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை அனுமதித்தால் வரக்கூடிய நாட்களில் யாராவது `பிரிட்டிஷ் யாருக்கு மகாத்மா காந்தி வேலையாளாக செயல்பட்டார்’ என பேசத் தொடங்குவார்கள்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த முறை உங்களுக்கு நாங்கள் சில நிவாரணங்களை கொடுக்கிறோம். அதே நேரத்தில் இனிமேல் கொண்டு எந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும் இப்படி பேசக்கூடாது என்று உங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கிறோம். அதையும் மீறி நீங்கள் ஏதேனும் பேசுவீர்களானால், உங்களுக்கு எதிராக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவோம்” என கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

`6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’ - வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கடந்த 1996- 2001 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடங்கப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து ... மேலும் பார்க்க

Tasmac Case : `முகாந்திரம் உள்ளது' - ED சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதன... மேலும் பார்க்க

`ஏற்கெனவே அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறோம் என்கிறார்கள்; இதில் இது வேறா?’ - உச்ச நீதிமன்ற நீதிபதி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பி வைத்த பத்துக்கும் அதிகமான மசோதாக்களை நிலுவையில் போட்டு வைத்ததும், அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த... மேலும் பார்க்க

வக்பு : `புதிய நடவடிக்கைகள் கூடாது..!’ - இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உச்ச நீதிமன்றம் அதிரடி

வக்பு திருத்த சட்டத்தை நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் வெற்றிகரமாக நிறைவேற்றியது மத்திய அரசு.இந்த சட்டத்திற்கு எதிராக 90க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய... மேலும் பார்க்க

ADMK : அதிமுக கொடி, ஜெயலலிதா பெயர், படம்... டிடிவி தினகரனுக்கு எதிரான மனுவை வாபஸ் வாங்கிய எடப்பாடி!

அதிமுக-வின் கறுப்பு, வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவை பயன்படுத்த டிடிவி தினகரனுக்கு தடை விதிக்க கோரி சென்னை நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்ப... மேலும் பார்க்க

`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன... மேலும் பார்க்க