ஜெயிலர் - 2 படத்தில் இணைந்த பான் இந்திய பிரபலம்!
ஜெயிலர் - 2 திரைப்படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பை முடித்தபின் இயக்குநர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் இப்பாகத்திலும் நடிக்கின்றனர்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவை அருகே உள்ள ஆனைக்கட்டி மலைப்பகுதியில் துவங்கியுள்ளது. அங்கு, சில முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தில் நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இப்பாகத்தில் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: டொவினோ தாமஸ், சேரன் நடித்த நரிவேட்டை டிரைலர்!