பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்
வீடுகளுக்கு மாதம் ரூ. 200 -க்கு இணைய சேவை! - பேரவையில் அமைச்சர் தகவல்
தமிழகத்தில் வீடுகளுக்கு ரூ. 200-க்கு இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் முக்கிய அறிவிப்பாக, வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை போல, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
முதல்வருக்கு பாராட்டு விழா: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு!