அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்பிய 191 பாகிஸ்தானியர்கள்
பஞ்சாபின் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை 191 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா எல்லையை மூட மத்திய அரசு நேற்று முன்தினம் (ஏப்.23) இரவு உத்தரவிட்டது.
இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டதுடன், அந்நாட்டிலுள்ள இந்தியர்களைத் தாயகம் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் மிஷன் இம்பாஸிபிள்!
மேலும், உரிய ஆவணங்களுடன் அட்டாரி - வாகா எல்லையைக் கடந்த நபர்கள் இந்தியாவுக்கு வரும் மே.1 ஆம் தேதிக்குள் திரும்பிவர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை 191 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் பாகிஸ்தானில் இருந்து 287 இந்தியர்களும் தாயகம் திரும்பினர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.