Indus River: ``சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்...
'பஹல்காமில் எப்படி பாதுகாப்பு குறைபாடானது?' - அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் பேசியதென்ன?
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
'அனைவரும் ஒப்புக்கொண்டனர்' - கிரண் ரிஜிஜு
இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக பாஜக-வின் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற அரசின் நிலைப்பாடு குறித்து பேசப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் தொழில் செய்து வந்தனர். சுற்றுலா பயணிகளும் குவிந்தனர். காஷ்மீரின் வளர்ச்சி நன்றாக இருந்து வந்ததது.
இந்த சம்பவம் அந்த அமைதியை குலைத்துள்ளது. இதற்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் நாடே ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும், குரல் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சியினரும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில், பஹல்காமில் என்ன நடந்தது, எப்படி நடந்தது, எங்கே பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது என்பது குறித்து உளவுத்துறை, உள்துறை அமைச்சகம் அரசின் சார்பில் விளக்கமளித்தது" என்று கூறினார்.
'துணை நிற்கும்' - ராகுல் காந்தி
மத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து உள்ளோம். இதற்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் எதிர்க்கட்சி துணை நிற்கும்" என்று கூறினார்.
'ஏன் பிரதமர் வரவில்லை?' - மல்லிகார்ஜுன் கார்கே
காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். அதற்காக அனைவரும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அரசு துரிதமாக செயல்படாததால் 26 உயிர்கள் பலியாகி உள்ளது.
இந்த மாதிரியான முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில், பிரதமர் எடுப்பது தான் இறுதி முடிவு. மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்தும் எங்கே பாதுகாப்பு குலைந்தது?
இது பாதுகாப்பு குறைபாடு மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக அரசு துரிதமாக செயல்படவில்லை. தேசத்தின் சிறந்த நலனுக்காக அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் துணை நிற்போம்" என்று பேசினார்.
யார் யார் கலந்துகொண்டனர்?
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.