Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' ...
ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்
சென்னை: பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேட்டூா் அணையில் தற்போது ரூ. 20 கோடி செலவில் அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்படும்போது பணிகள் நிறுத்தப்படும். பாசனக் காலம் முடிந்த பிறகு மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் புகார்
இந்த நிலையில், பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மேட்டூர் அணை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணை திறப்பு செய்தியால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.