ரயிலை கவிழ்க்க சதியா..?: திருவள்ளூர் அருகே தண்டவாளத்தின் போல்ட்நட்டுகள் அகற்றம்!
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தின் இணைப்புப் பகுதியில் போல்ட்நட்டுகள் அகற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகே திருவலாங்காடு ரயில் நிலையம் அருகே அரிச்சந்திராபுரம் பகுதியில் சென்னை செல்லும் ரயில் தண்டவாளத்தின் இணைப்புப் பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்
தண்டவாளத்தின் இணைப்புப் பகுதியில் போல்ட்நட்டுகள் அகற்றப்பட்டிருப்பதை லைன்மேன் உரிய நேரத்தில் கண்டறிந்ததாலும் சிக்னல் கட் ஆனதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டாவள இணைப்புப் பகுதியில் போல்ட்நட்டுகளை அகற்றியவர் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அலுவலர்கள் ரயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் நான்சி வரவழைக்கப்பட்டு ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.