செய்திகள் :

போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் புகார்

post image

அரக்கோணம்: போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் துணை ராணுவப்படையில் அஸ்ஸாமைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 8 பேர் சேர முயற்சி செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தக்கோலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரி குப்பத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையம் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் துணை ராணுவப்படையான மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் சேர தேர்வு செய்யப்படும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என இருபாலருக்கும்

இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இந்த படையில் சேர கடந்த மார்ச் மாதம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஆண்,பெண் படைவீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரக்கோணத்தை அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மண்டல பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கும் வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது மையத்திற்கு வரத் தொடங்கி உள்ளனர். இவர்களது சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெற்ற உடன் உண்மைத்தன்மை சோதனைக்காக அந்தந்த மாநில அரசுகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த முடிவுகள் வரும் வரை பயிற்சியில் சேர வருவோர் மையத்திலேயே தங்க வைக்கப்படுகின்றனர்.

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா தக்க பதிலடி!

இதுபோன்று அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அதே மாநிலம் சில்சார் மாவட்டத்தை சேர்ந்த கே.எம்.நிஷா, கடாரியா ருஜிதா தேவி ஆகிய இரு பெண்கள், அஜய் யாதவ், முகேஷ் மவுரியா, சந்திரிகா சிங், அமித் குமார், எம்.டி,தன்வீர், நரேந்திர சிங் ஆகிய எட்டு பேருடைய சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிய அசாம் மாநிலம் சின்சார் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் அந்த எட்டு பேரின் சான்றிதழ்களும் போலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த எட்டு பேர் மீதும் பயிற்சி மைய ஆய்வாளர் ராஜேஷ் தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகார் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூ. கட்சிகள் போராட்டம்!

ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றன.உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாடு இன்றும் நாளையும் (ஏப். 25, 26) நடைபெறுகிற... மேலும் பார்க்க

ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.மேட்டூா் அணையில் தற்போது ரூ. 20 கோடி செலவில் அணையின் வலது கரை, இடது கரை, 16 கண... மேலும் பார்க்க

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா தக்க பதிலடி!

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு இந்திய எல்லைப் பகுதியில் உள்ள சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என ராணுவ அதிக... மேலும் பார்க்க

ரயிலை கவிழ்க்க சதியா..?: திருவள்ளூர் அருகே தண்டவாளத்தின் போல்ட்நட்டுகள் அகற்றம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தின் இணைப்புப் பகுதியில் போல்ட்நட்டுகள் அகற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போல... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது வீர தீர சூரன் - 2!

விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் - 2 படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஒ... மேலும் பார்க்க

என்எல்சி தொமுச-வை தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான ம... மேலும் பார்க்க