செய்திகள் :

Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்கர் கண்டனம்

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். மற்ற அனைவரும் இந்தியாவின் 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பாகிஸ்தான் கூறிவரும் அதேவேளையில், பாகிஸ்தானை நேரடியாக குற்றம்சாட்டாமலேயே அந்நாட்டின் மீது, `சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, விசாக்கள் ரத்து, இங்கிருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற்ற உத்தரவு' உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்திருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் தொடரும் அதிரடிகள்
Pahalgam Attack: இந்தியா, பாகிஸ்தான் தொடரும் அதிரடிகள்

இந்தியாவின் இத்தகைய செயலுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் பாகிஸ்தான் அரசு, சிந்து நதிநீரை நிறுத்துவது போர் நடவடிக்கை என்றும், சிம்லா ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்வோம் என்றும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், உலகத் தலைவர்கள், இந்திய சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், நேற்று (ஏப்ரல் 24) பெங்களூரு vs ராஜஸ்தான் ஐ.பி.எல் போட்டிக்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்தில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், "தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் இந்தியர்களாகிய நம் அனைவரையும் பாதித்திருக்கிறது.

சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

இதன் குற்றவாளிகள், அவர்களுக்கு ஆதரவளிக்கும் தீவிரவாதிகள், அவர்களை வழிநடத்துபவர்கள் ஆகிய அனைவரிடமும் ஒரு கேள்வி கேட்கிறேன்... இந்த சண்டையில் சாதித்தது என்ன? கடந்த 78 வருடங்களாக ஒரு மில்லி மீட்டர் இடம் கூட கைமாறப்படவில்லை. அடுத்த 78,000 ஆண்டுகளுக்கும் எதுவும் மாறப்போவதில்லை. அப்படியென்றால் நாம் ஏன் நிம்மதியாக வாழக்கூடாது? நம் நாட்டை ஏன் நம் நாட்டைப் பலப்படுத்தக் கூடாது? எனவே இதுதான் எனது வேண்டுகோள்" என்று கூறியிருக்கிறார்.

Fleming: இளம் வீரர்களுக்கு எதிராக தவறான தகவல்; தவறான அணுகுமுறை.. முரண்பாடாக பேசும் ப்ளெம்மிங்!

'இளம் வீரர்களுக்கு எதிராக ப்ளெம்மிங்!'சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் மைக்கை பிடித்தாலே இளம் வீரர்களை விமர்சிக்கும் தொனியில் மட்டுமே பேசுகிறார். இளம் வீரர்கள் சார்ந்த அவருடைய பார்வையை வ... மேலும் பார்க்க

`புகழ் உச்சம் பெற்று திடீரென காணாமல் போவார்கள், அதனால்..' - சூர்யவன்ஷி குறித்து சேவாக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகிறார். ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார். லக்னோவுக்கு எதிரான அறிமுக போட்டியில் ... மேலும் பார்க்க

Arjun Tendulkar: ``இதைச் செய்தால் அடுத்த கெயில் அர்ஜுன் டெண்டுல்கர்தான்'' - யுவராஜ் தந்தை சவால்

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனாக இருந்தாலும், கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக தனக்கென தனி இடம்பிடிக்கப் போராடிவருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். ஐ.பி.எல்லில் 2023... மேலும் பார்க்க

CSK vs SRH: `ஒன்றிரண்டு பேரை தவிர யார் ரன் அடித்திருக்கிறார்கள்?' - இளம் வீரர்கள் பற்றி ப்ளெம்மிங்!

'சென்னை vs ஹைதராபாத்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு செ... மேலும் பார்க்க

CSK vs SRH: `எங்களோட இன்ஸ்பிரேஷன் RCB தான்!' - ப்ளே ஆப்ஸ் வாய்ப்புப் பற்றி ஸ்டீபன் ப்ளெம்மிங்!

'சென்னை vs ஹைதராபாத்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு செ... மேலும் பார்க்க

Pahalgam Attack: `எங்கள் அரசு செய்வதை நாங்கள் செய்வோம்’ - BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் ... மேலும் பார்க்க