செய்திகள் :

CSK vs SRH: `ஒன்றிரண்டு பேரை தவிர யார் ரன் அடித்திருக்கிறார்கள்?' - இளம் வீரர்கள் பற்றி ப்ளெம்மிங்!

post image

'சென்னை vs ஹைதராபாத்!'

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் வந்திந்திருந்தார். அப்போது, இளம் வீரர்களைப் பற்றி முக்கியமாக சில விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

Stephen Fleming
Stephen Fleming

'இளம் வீரர்களைப் பற்றி ப்ளெம்மிங்!"

அவர் பேசியதாவது, 'இளம் வீரர்களைப் பற்றி கேட்கிறீர்கள். நாங்கள் முதலில் இளம் வீரர்களை கண்டடைய வேண்டும். ஆனால், நடப்பு சீசனின் அதிக ரன்கள் எடுத்த டாப் 20 வீரர்களைப் பாருங்கள். அதில் எத்தனை இளம் வீரர்கள் இருக்கிறார்கள்? அதிகபட்சம் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். நல்ல திறமையான வீரர்களை எனக்கும் பிடிக்கும்.

கடந்த 2-3 ஆண்டுகளில் பயமில்லாமல் ஆடும் வீரர்களுக்கான ஆட்டமாக போட்டி மாறியிருப்பதையும் அறிகிறேன். ஆனால், நாங்கள் அதிகமாக அனுபவ வீரர்களைத்தான் நம்பியிருக்கிறோம். இளம் வீரர்களால் ஒரே பாணியில்தான் ஆட முடிகிறது. ஆனால், அனுபவ வீரர்களால் போட்டியின் சூழலை புரிந்து பல வழிகளில் ஆட முடியும்.

Fleming
Fleming

திறமையான இளம் வீரர்கள் அனுபவ வீரர்கள் இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கடினமான சூழல்களில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள்தான் எனக்கு தேவை. அப்படிப்பட்ட வீரர்களின் வயதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆயுஷ் மாத்ரே ஆடிய விதம் எங்களுக்கு வியப்பாகத்தான் இருந்தது.' என்றார்.

'எல்லா இடத்திலும் பிரச்னைதான்!'

சென்னை அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் அதிகமாக ரன்கள் அடிப்பதில்லையே. என்ன காரணம்? என ஒரு பத்திரிகையாளர் கேட்க, அதற்கு ப்ளெம்மிங், 'டாப் ஆர்டர் மட்டும் ரன் அடிக்கிறார்களா?' எனும் தொனியில் பதில் கேள்வியை கேட்டிருந்தார்.

Stephen Fleming | ஸ்டீபன் ஃப்ளெமிங்

மேலும் பேசியவர், 'எங்களுக்கு டாப் ஆர்டரில் மொமண்டமே கிடைப்பதில்லை. டாப் ஆர்டரிலிருந்து 75 ரன்களுக்கு மேல் வந்தால் பேட்டர்கள் அவர்களுக்கான அந்தந்த ஆர்டர்களிலும் இடத்திலும் இறங்குவார்கள். நல்ல தொடக்கம் கிடைக்காத போது அத்தனை வீரர்களின் இடமும் மாறுகிறது. அதுதான் பிரச்னை.' என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

CSK vs SRH: `எங்களோட இன்ஸ்பிரேஷன் RCB தான்!' - ப்ளே ஆப்ஸ் வாய்ப்புப் பற்றி ஸ்டீபன் ப்ளெம்மிங்!

'சென்னை vs ஹைதராபாத்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு செ... மேலும் பார்க்க

Pahalgam Attack: `எங்கள் அரசு செய்வதை நாங்கள் செய்வோம்’ - BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் ... மேலும் பார்க்க

SRH vs MI : 'ரோஹித்தின் கம்பேக்கும் மும்பையின் எழுச்சியும்!' - ஓர் அலசல்

'மும்பையின் கம்பேக்!'சன்ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர்ச்சியாக அந்த அணி பெறும் நான்காவது வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்... மேலும் பார்க்க

Ishan Kishan :அவுட் கொடுக்கப்படாமல் வெளியேறிய இஷன் கிஷன்; பாராட்டிய ஹர்திக்; ட்விஸ்ட் என்ன தெரியுமா?

'இன்றைய போட்டி!'சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் வீரர் இஷன் கிஷன் அம்பயர் அவுட் கொடுக்காமல் அவரே வெள... மேலும் பார்க்க

IPL 2025: ருதுராஜ், சாம்பா, ஃபர்குசன்... சீசனை விட்டு வெளியேறிய வீரர்கள் யார் யார்?

IPL 2025 சீசன் பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. வீரர்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வருவதும் எதிர்பாராத தருணத்தில் வெளியேறுவதுமாக சினிமாவைத் தாண்டிய பரபரப்பு ஒவ்வொரு ... மேலும் பார்க்க

``திக்வேஷ் செய்தால் அபராதம், Kohli செய்தால் நியாயமா? BCCI இரட்டை வேடம்..'' - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் ஸ்பின்னரான திக்வேஷ் ரதி இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாகப் பந்து வீசி வருகிறார். மெகா ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி, இதுவரை 9 போட்டிகளில் 9 விக... மேலும் பார்க்க