SRH vs MI : 'ரோஹித்தின் கம்பேக்கும் மும்பையின் எழுச்சியும்!' - ஓர் அலசல்
Ishan Kishan :அவுட் கொடுக்கப்படாமல் வெளியேறிய இஷன் கிஷன்; பாராட்டிய ஹர்திக்; ட்விஸ்ட் என்ன தெரியுமா?
'இன்றைய போட்டி!'
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் வீரர் இஷன் கிஷன் அம்பயர் அவுட் கொடுக்காமல் அவரே வெளியேறிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்திருந்தது.

'தாமாக வெளியேறிய இஷன் கிஷன்!'
சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. இஷன் கிஷன் நம்பர் 3 இல் வந்தார். மூன்றாவது ஓவரை தீபக் சஹார் வீசியிருந்தார். இந்த ஓவரின் முதல் பந்தை லெக் ஸ்டம்ப் லைனில் குட் லெந்த்தாக சஹார் வீசியிருந்தார். இஷன் கிஷன் அதை லெக் சைடில் தட்டிவிட முயன்றார். ஆனால், மிஸ் ஆகிவிட்டது.
தீபக் சஹார், கீப்பர் ரிக்கல்டன் என யாருமே முழுமனதோடு எட்ஜூக்காக அப்பீல் செய்யவே இல்லை. ஆனால், இஷன் கிஷன் தாமாகவே தன்னுடைய பேட்டில் பந்து உரசிவிட்டது எனக் கூறி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பேட்டரே ஒத்துக்கொண்டதால் நடுவரும் அவுட் எனக் கூறினார்.
எட்ஜ் எனத் தெரிந்தவுடன் பெவிலியனுக்கு திரும்பிய இஷன் கிஷனை மும்பையின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பல வீரர்களும் தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தனர்.
'ட்விஸ்ட்...'
இதில் ஒரு ட்விஸ்ட்டும் நடந்திருந்தது. இஷன் கிஷன் பெவிலியனுக்குத் திரும்பிய பிறகு டிவி ரீப்ளை காட்டப்பட்டது. அதில், ஸ்நிக்கோ மீட்டரில் பந்து இஷன் கிஷனின் பேட்டில் உரசவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஆக, அவுட்டே இல்லாமல் இஷன் கிஷன் தாமாக வெளியேறியிருக்கிறார். இதனால் இஷன் கிஷன் உட்பட சன் ரைசர்ஸ் வீரர்கள் அனைவருமே அதிருப்தி அடைந்தனர்.

நல்லவனா இருக்கலாம், அதுக்குன்னு இப்படியா என நெட்டிசன்கள் இஷன் கிஷனை கலாய்த்து வருகின்றனர்.