பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தை மூடத் திட்டம்? மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது...
Pahalgam Attack: "மௌன அஞ்சலி, கறுப்பு பட்டைகள்..." - MI vs SRH போட்டியில் BCCI அஞ்சலி
ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு இன்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியில் அஞ்சலி செலுத்தப்படும் எனக் கூறியுள்ளது.
IPL 2025 சீசனின் 41 வது லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது.
— Mumbai Indians (@mipaltan) April 23, 2025
ஆனால் கடைசி மூன்று போட்டிகளில் அதிரடியாக விளையாடி தொடர் வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இன்றைய போட்டியை வெல்லும்பட்சத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்பதால் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மறுபக்கம் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் வாய்ப்பு மிக மிக கடினமானதாகிவிடும். இரண்டு அணிகளும் இக்கட்டான நிலையில் இருப்பதால் இன்றைய போட்டியின் மீது அதீத எதிர்பார்ப்பு உள்ளது.
Breaking
— vipul kashyap (@kashyapvipul) April 23, 2025
Ahead of Phalagam Attack : Players and umpires to wear black armbands in today's match also One minute silence before the start of the match and there will be no cheerleaders today also no fireworks : BCCI @BCCI#Phalagamattack
BCCI அஞ்சலி
நேற்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தீவிரவாத தாக்குதலில் பலியான 28 அப்பாவி மக்களுக்காவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்திருந்தனர்.
உயிரிழந்தவர்களுக்காக இன்றைய போட்டியில் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது. மேலும், போட்டியின்போது ஒவ்வொரு சிக்சர் மற்றும் பௌண்டரிக்கு நடைபெறும் கொண்டாட்டங்கள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியர் லீடர்ஸ் கிடையாது.
மேலும் வானவேடிக்கை நிகழ்வுகள் கிடையாது என்றும், களத்தில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கறுப்பு பட்டையுடன் களமிறங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.