செய்திகள் :

அமித் ஷா பதவி விலக வேண்டும்: தொல். திருமாவளவன்

post image

பெஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,

"காஷ்மீரில் நடந்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பயங்கரவாதத்தை நசுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு- காஷ்மீர் விஷயத்தில் அவர்கள் எடுத்த நடவடிக்கை, இந்த விளைவை உருவாக்கியிருக்கிறது. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என்பதைத்தான் இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

சட்டப்பிரிவு 370-யை நீக்கிவிட்டால் அங்கு பயங்கரவாதம் இருக்காது என்று தொடர்ந்து பாஜக சொல்லிவந்தது. அதன்படியே அதனை நீக்கிவிட்டார்கள். 'பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம், சுற்றுலாப் பயணிகள் அங்கு தாராளமாகச் செல்லலாம்' என்று பாஜக கூறியதை நம்பிப்போனவர்கள் இன்று படுகொலையாகியிருக்கின்றனர். எனவே, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க | பெஹல்காம்: இஸ்லாமிய வாசகங்களை கூறக் கட்டாயப்படுத்திய பயங்கரவாதிகள்!

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபடு... மேலும் பார்க்க

அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்: அண்ணாமலை என்ன சொல்கிறார்!

பெஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நமது தலைவர்கள் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூரு வழியாக... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்... மேலும் பார்க்க

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற... மேலும் பார்க்க

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்: முதல்வர்

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக புத்தக நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினின் தன்னுடைய எக்ஸ் தளப... மேலும் பார்க்க

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில்!

மும்பை - கன்னியாகுமரி இடையே வாராந்திர கோடை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்து வருகிறது. அந்தவக... மேலும் பார்க்க