ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!
ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குல்காம் மாவட்டத்தின் தாங்மார்க் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு இன்று (ஏப்.23) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால், அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையின்போது அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த செய்திகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, இன்று (ஏப்.23) காலை அம்மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்திலுள்ள இந்திய எல்லைக்கோட்டின் வழியாக இந்தியாவினுள் ஊடுறுவ முயன்ற 2 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
மேலும், பெஹல்காம் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்.22) நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 28 பேர் (2 வெளிநாட்டினர்) பலியானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாகும் காஷ்மீர் மக்களை நினைத்தால்... ஆண்ட்ரியா வேதனை!