SRH vs MI : 'ரோஹித்தின் கம்பேக்கும் மும்பையின் எழுச்சியும்!' - ஓர் அலசல்
போல்ட் 4 விக்கெட்டுகள், கிளாசன் அதிரடியால் மீண்ட சன்ரைசர்ஸ்: மும்பைக்கு 144 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் 2025-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார்.
சன்ரைசர்ஸ் அணி மிக மோசமாக விளையாடி பவர்பிளேவில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நடுவரின் தவறான தீர்ப்பினால் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் ரிவிவ் கேட்காமல் வெளியேறியது சர்ச்சையானது.
அடுத்ததாக கிளாசனுடன் இம்பாக்ட் வீரர் அபிநவ் மனோகர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டார்கள்.
அதிரடியாக விளையாடிய கிளாசன் 71 ரன்களுக்கு பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். அபிநவ் மனோகர் 43 ரன்களுக்கு போல்ட் ஓவரில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 143/8 ரன்கள் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் சார்பில் டிரெண்ட் போல்ட் 4, தீபக் சஹார் 2, பாண்டியா, பும்ரா தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.