ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியைக் கண்டித்து ஏப். 28-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்
ஜம்மு - காஷ்மீர்: 4 மாதங்களில் 35 மக்கள், வீரர்கள் சுட்டுக்கொலை!
ஜம்மு - காஷ்மீரில் கடந்த 4 மாதங்களில் மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் என இதுவரை 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக நேற்று பெஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியாகினர். இதில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு அடுத்தபடியாக ஜம்மு எல்லையில் கதுவா மாவட்டத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதில் தாக்குதலாக அங்கு 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு மாவட்டத்தில் 3 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்தனர். கிஷ்த்வார் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதேபோன்று காஷ்மீர் எல்லையில் அதிகபட்சமாக பெஹல்காம் பகுதியில் 26 பேரும், குல்காமில் ஒருவரும் பாரமுல்லாவில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பூஞ்ச் பகுதியில் 2 பயங்கரவாதிகளும், பாரமுல்லாவில் 2 பயங்கரவாதிகளும், குப்வாரா பகுதியில் ஒரு பயங்கரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | அட்டாரி - வாகா எல்லை மூடல்; மத்திய அரசு அதிரடி உத்தரவு!