ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அண்ணா நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, 22-ஆம் தேதி காலை முதல் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. புதன்கிழமை காலை ஐயப்ப சுவாமிக்கு மூல மந்திர ஹோமம், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று, கடம் புறப்பாட்டு நடைபெற்று விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். பின்னா், கருவறையில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.