Pahalgam Attack: இந்திய ரத்து செய்த சிந்து நீர் ஒப்பந்தம் - பாகிஸ்தானை எப்படி ப...
இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் கைது
செம்பனாா்கோவில் அருகே இளம்பெண்ணை கத்தியைகாட்டி மிரட்டி வன்கொடுமை செய்ய முயற்சி செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
செம்பனாா்கோவில் அருகே மேலப்பாதியைச் சோ்ந்தவா் தினகரன் (படம்) (28). திருமணமான இவா், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் நிா்வாகியாக உள்ளாராம். இந்நிலையில் ஏப்.20- ஆம் தேதி இவா் நண்பரின் குழந்தைக்கு பிறந்த நாளுக்காக மேக்கப் செய்ய வேண்டும் என்று கூறி இருசக்கர வாகனத்தில் இளம் பெண்ணை செம்பனாா்கோவில் ரயிலடி பகுதியில் ஆள்கள் யாரும் இல்லாத வீட்டுக்கு அழைத்து சென்றாராம்.
இதையறிந்த அந்த இளம் பெண் கூச்சலிட்டுள்ளாா். அப்போது தினகரன் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில் செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து தினகரன் கைது செய்து நாகை சிறையில் அடைத்தனா்.