தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளுக்கு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பேசுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.