செய்திகள் :

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

post image

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ரா அமைப்பின் தலைவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற முப்படை தளபதிகளின் கூட்டத்தில், தயார் நிலையில் இருக்கவும், உச்சகட்ட கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் நடவடிக்கைகளை நாட்டின் அனைத்து அமைப்புகளும் உற்று கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போர்ப் பதற்றம் எழுந்துள்ளது.

இதையும் படிக்க : பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!

இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பினார் துணை அதிபர் வான்ஸ்!

இந்தியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாயகம் திரும்பியுள்ளனர். அமெரிக்காவிலிருந்து நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக அந்நாட்டு துணை ... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன் போராட்டம்!

பஹல்காம் தாக்குதலையடுத்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பக... மேலும் பார்க்க

பஹல்காம்: 65 சுற்றுலாப் பயணிகள் மும்பை வந்தடைந்தனர்!

ஜம்மு-காஷ்மீரில் சிக்கித் தவித்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 65 சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு மும்பை வந்தடைந்தது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்ப... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லை மூடல்: இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லை மூடப்பட்டதினால் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொ... மேலும் பார்க்க

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள வசந்த்கார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்... மேலும் பார்க்க