செய்திகள் :

இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பினார் துணை அதிபர் வான்ஸ்!

post image

இந்தியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாயகம் திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவருடைய மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் கடந்த ஏப்.21 ஆம் தேதி இந்தியா வந்தடைந்தனர்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றார். அவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாஜ் மஹால் முன்பு வான்ஸ் குடும்பத்தினர்

கடந்த ஏப்.21 ஆம் தேதி தில்லியிலுள்ள அவரது இல்லத்தில், துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்ற பிரதமர் மோடி அங்கு அவர்களுக்கு விருந்து அளித்தார். இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

இத்துடன், ஜே.டி.வான்ஸின் மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதினால் அவர்களது குழந்தைகள் பெரும்பாலும் இந்தியாவின் பாரம்பரிய உடைகளையே அணிந்திருந்தனர்.

மேலும், இந்தியாவின் முக்கிய வரலாற்று சிறப்புமிக்க தளங்களை வான்ஸ் குடும்பத்தினர் சுற்றிப்பார்த்தனர். ஆக்ராவிலுள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ஜெய்ப்பூரிலுள்ள அம்பெர் கோட்டை, மத்திய குடியைத் தொழில் எம்போரியம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று அவர்கள் கண்டுகளித்தனர்.

தனி விமானம் மூலம் தாயகம் திரும்பினார்கள் வான்ஸ் குடும்பத்தினர்

இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர்கள் தங்களது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (ஏப்.24) காலை அமெரிக்காவுக்கு தனி விமானம் மூலம் திரும்பிச் சென்றுள்ளனர்.

முன்னதாக, பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர்.

மேலும், நேற்று (ஏப்.23) ஜெய்ப்பூர் மாளிகைக்கு அவர்கள் செல்லத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களினால் அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அட்டாரி-வாகா எல்லை மூடல்.. நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில்... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: அமர்நாத் ஆன்மிகப் பயணம் ரத்து!

பெஹல்காம் தாக்குதலை எதிர்த்து, பாகிஸ்தான் தூதரகம் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பயங... மேலும் பார்க்க

தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் ப... மேலும் பார்க்க

வான்வெளியைப் பயன்படுத்தத் இந்திய விமானங்களுக்கு தடை: பாகிஸ்தான்

இந்தியாவுடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.தொடர்ந்து, இந்தியாவுட... மேலும் பார்க்க

பாகிஸ்தானியர்களின் விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானிய திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை!

பாகிஸ்தான் நடிகரின் திரைப்படம் இந்தியாவில் திரையிடப்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானின் நடிப்பில் உருவானப் படமான ‘அபிர் குலால்’ வரும் மே.9 ஆம் தேதி முதல் இந்திய திரையரங்குகளில் ... மேலும் பார்க்க