செய்திகள் :

அக்னி நட்சத்திரம் எப்போது?

post image

தமிழ் நாள்காட்டியில் குறிப்பிடப்படும் கத்தரி வெய்யில் என்கிற அக்னி நட்சத்திரம் இந்தாண்டு எப்போது தொடங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

ஒவ்வொரு ஆண்டும் வெய்யில் மாதங்களான மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கும். அதிலும் கத்திரி வெய்யில் என்னும் அக்னி நட்சத்திரம் நெருப்பை அள்ளி தலையில் கொட்டுவது போன்று வெய்யில் பிளந்து எடுக்கும்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிப்ரவரி முதலே வெய்யில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒருசில இடங்களில் வெய்யில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு கூடுதலாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நம்மைக் குளிர்விக்கக் கோடை மழையும் அவ்வப்போது தலைகாட்டிச் சென்றாலும், அடுத்த நாளே வழக்கம்போல் வெய்யில் கொளுத்தத் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே தமிழகத்தில் பல இடங்களில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வாினிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தாண்டின் கத்தரி வெய்யில் எனும் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை நீடிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கில நாள்களின்படி கிட்டத்தட்ட மே மாதம் முழுவதுமே இந்தாண்டு கத்தரி வெய்யில் கொளுத்தப்போகிறது.

கோடை வெப்பத்திலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள அதிகப்படியான தண்ணீர் அருந்துவதும், உடல் அதிக சூடு ஆகாமலும் பார்த்துக்கொள்ளவும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். வெளியில் செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள்.

முக்கியமாக அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத்தடை!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்ப... மேலும் பார்க்க

4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி வெய்யில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெய்யில் கொளுத்தி வர... மேலும் பார்க்க

மற்றொரு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து!

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் 6 மாதங்களுக்குள் வழக்கினை வேலூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தர... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: கல்லூரிகள் திறப்பு எப்போது?

கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் கல்லூரிகள் ஜூன் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2025-2026 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

500 பேர் தங்கி படிக்க போட்டித் தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் அறிவிப்பு!

சென்னை ஷெனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.சட்டப்பேரவையில் இன்று(ஏப். 24) ஒரு சில முக்கிய ப... மேலும் பார்க்க

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயா் நீதிமன்ற வளாகத்துக்குள் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்... மேலும் பார்க்க