செய்திகள் :

கொல்கத்தாவில் 2 போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு: 16 பேர் கைது

post image

கொல்கத்தா: கொல்கத்தாவில் இயங்கி வந்த 2 போலி கால் சென்டரைக் கண்டுபிடித்து 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

கொல்கத்தாவின் செலிம்பூரில் ஒரு கால் சென்டர் மற்றும் பெஹாலாவில் இரண்டு கால் சென்டர் இயங்கி வந்துள்ளது. இந்த மையங்களில் செவ்வாய்க்கிழமை இரவு அதிரடியாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது இவை போலி கால் சென்டர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்து பல செல்போன்கள், கணினிகள், மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று அவர்கள் கூறினார்.

இந்த போலி கால் சென்டர்கள் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை தொழில்நுட்ப உதவி என்ற பெயரில் பாதிக்கப்பட்டவா்களைத் தொடா்பு கொண்டு மிரட்டிப் பெரும் தொகையை வசூலித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இவர்களுக்கு தேசிய அல்லது சர்வதேச மோசடி கும்பலுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கொல்கத்தா காவல்துறை அதிகாரி கூறினர்.

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழக அரசு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளை... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசாா்ட் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் அதிரடி நடவடிக்கை! 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தில் தெலங்கானா எல்லைக்கு அருகிலுள்ள காரேகுத்தா மலைப்பகுதியிலுள்ள காடுகளில் நக்சல்களுக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: 3 சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் குஜராத் வந்தடைந்தன

அகமதாபாத்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் குஜராத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் அகமதாபாத் மற்றும் சூரத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர... மேலும் பார்க்க

கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

கடலூர்: கடலூரில் வியாழக்கிழமை ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் பேருந்து நிலையப் பகுதியில் போலீஸார் ... மேலும் பார்க்க