தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
கடலூர்: கடலூரில் வியாழக்கிழமை ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் பேருந்து நிலையப் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு பேருந்து வந்தது. பேருந்தை சோதனையிட்டத்தில் பெரிய அளவிலான பைகளுடன் இருந்த நவீத் அன்வர் என்பவரின் உடைமைகளை காவல்துறையினர் சோதனையிட்ட போது, அதில் ரூ.40 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது.
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழக அரசு
அவர் வைத்திருந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் முரண்பட்ட தகவல்கலைத் தெரிவித்ததால் அவரிடம் இருந்த ரூ.40 லட்சம் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் எனத் தெரிகிறது.
சென்னையில் அவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பிய நபா் யாா், மன்னார்குடியில் பணத்தை வாங்கிச் செல்ல இருந்தவா் யாா், எங்கிருந்து ஹவாலா பணம் அனுப்பப்பட்டது போன்றவை குறித்து வருமான வரித் துறையினா் விசாரணை நடத்துவாா்கள் எனக் கூறப்படுகிறது.