செய்திகள் :

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு!

post image

சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நடைபெறும் நகரம் எது என்பது குறித்த அறிவிப்பு என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு மே 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, எந்த நகரத்தில் தேர்வு மையம் அமையவிருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு ஏப்ரல் 23ஆம் தேதி இரவு வெளியாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் மாணவர்கள் அந்த நகரத்துக்குச் செல்வது, அங்கும் வசதி ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு மாா்ச் முதல் வாரத்தில் நிறைவு பெற்ற நிலையில், தற்போது நகரத்துக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்தத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் மூலமாகவே நடந்து முடிந்தது. விரைவில் அல்லது மே 1ஆம் தேதி நுழைவுச் சீட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளைவிட முன்கூட்டியே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்வட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற... மேலும் பார்க்க

பொறியியல் நுழைவுத் தோ்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் இணைந்து நடத்தும் பொறியியல் பாடப்பிரிவுக்கான அகில இந்திய நுழைவுத்தோ்வு (ஜெஇஇ) பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது.. இதைச் செய்யாவிடில் பணம் வேஸ்ட்!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் முடிவுபெற்ற நிலையில், அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயின்ற +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வும் நிறைவு பெற்றுவிட்டது.பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள், அடுத்து கல்லூரி மற்றும் பல... மேலும் பார்க்க