செய்திகள் :

அதிக விக்கெட்டுகள்: மலிங்காவின் சாதனையை சமன்செய்த பும்ரா!

post image

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான லாசித் மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார்.

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்றிரவு (ஏப்.23) நடைபெற்ற போட்டியில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா 19ஆவது ஓவரில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கிளாசன் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த (170) மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார்.

மலிங்கா இந்த 170 விக்கெட்டினை தனது 122 போட்டிகளில் எடுக்க பும்ராவுக்கு 138 போட்டிகள் தேவைப்பட்டுள்ளன.

இந்த விக்கெட்டுடன் பும்ரா டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற புதிய மைல்கல்லையும் தொட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக விக்கெட்டுகள்

1. லாசித் மலிங்கா - 170

2. ஜஸ்பிரீத் பும்ரா - 170

3. ஹர்பஜன் சிங் - 127

4. மிட்செல் மெக்லாஹன் - 71

5. கைரன் பொல்லார்ட் - 69

ரோஹித் சர்மா மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவார்: டிரெண்ட் போல்ட்

ரோஹித் சர்மா உலகத் தரத்திலான வீரர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ... மேலும் பார்க்க

சின்னசாமி திடலில் ரஜத் படிதாருக்கு காத்திருக்கும் சவால்: ஜிதேஷ் சர்மா

ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 8இல் 3 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. 10 புள்ளிக... மேலும் பார்க்க

என் பேட்டிங் வளர்ச்சிக்குக் காரணம் தினேஷ் கார்த்திக்: ஜிதேஷ் சர்மா

ஜியோ ஹாட்ஸ்டார் பேட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மா தினேஷ் கார்த்திக் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டி... மேலும் பார்க்க

தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் நேற்றிரவு (ஏப்.23) வீழ்த்தியது.முதலில் ஹைதராபாத் 20 ... மேலும் பார்க்க

5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் ஹைதராபாத் 20 ஓவா்கள... மேலும் பார்க்க

போல்ட் 4 விக்கெட்டுகள், கிளாசன் அதிரடியால் மீண்ட சன்ரைசர்ஸ்: மும்பைக்கு 144 ரன்கள் இலக்கு!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் எடுத்தது.ஐபிஎல் 2025-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்ட... மேலும் பார்க்க