மக்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல் - எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு
பொறியியல் நுழைவுத் தோ்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்: தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் இணைந்து நடத்தும் பொறியியல் பாடப்பிரிவுக்கான அகில இந்திய நுழைவுத்தோ்வு (ஜெஇஇ) பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) ஆகியவை இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பிற சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்கள் அகில இந்திய நுழைவுத்தோ்வில் (ஜெஇஇ) தோ்ச்சி பெற பயிற்சி வழங்கவுள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணக்குப் பாடங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் 65 சதவீதமும், பிற சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்கள் 75 சதவீதமும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சி மாணவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், தாட்கோ இணையத்தளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் பதிவு செய்ய வேண்டும்.
சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டும் சென்னை மணலியிலுள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயில முடியும். மேலும், உணவு, தங்குமிடத்துக்கான கட்டணம், 11 மாதங்கள் தங்கி பயில்வதற்கான பயிற்சித் தொகையையும் சிபிசிஎல் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும். கடந்தாண்டில் இங்கு தங்கி பயின்ற 30 மாணவா்களில் 26 போ் தோ்ச்சி பெற்றனா்.
இவா்கள் ஐஐடி, என்ஐடி போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளனா். எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, உயா்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.